ஆசிரியர்களுக்கு ஆபத்தாக மாறிய சேலை..! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
ஆசிரியர்களின் ஆடை தொடர்பான விடயம் சமகாலத்தில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் ஆசிரியர்கள் கல்வியமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய ஆடை அணிவது தொடர்பான ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜப்பான் பல்கலைகழகத்தின் கலாநிதிபட்ட ஆய்விற்காக லசினி ஜெயசூரிய என்பவர் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.
இதற்கமைய கல்வியமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய ஆடை அணிவதற்காக ஆசிரியர்கள் தங்கள் சம்பளத்தின் 15 வீதத்தினை செலவிடுகின்றனர் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆசிரியர்கள் தங்கள் சம்பளத்தின் குறிப்பிடத்தக்க பகுதியை பாடசாலைகளிற்கு அணிவதற்கான ஆடைகளை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்துகின்றனர்.ஆசிரியர்கள் சேலை அணியவேண்டும் என்ற கட்டாயம் காரணமாக அவர்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் எவ்வாறு பாதிக்கின்றது என்பதும் ஆய்வில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,