பட்டலந்த விசாரணை குறித்து சத்தியலிங்கத்தின் அவசர கோரிக்கை

Sri Lanka Current Political Scenario Pathmanathan Sathiyalingam
By Shalini Balachandran Apr 11, 2025 06:18 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

அரசியல் காரணத்திற்கு அல்லாமல் பட்டலந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் (P. Sathiyalingam) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (11) நடைபெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் "எமது நாட்டில் இடம்பெற்ற பாரதூரமான கொலைகள் தொடர்பான குற்றங்கள், நீதித்துறைக்கு விரோதமான கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவை போன்ற பல விடயங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வற் வரி திருத்தம் மீதான சட்டமூலத்தை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்

வற் வரி திருத்தம் மீதான சட்டமூலத்தை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்

பல்வேறு அறிக்கைகள் 

இந்த அறிக்கை 35 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் இப்போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

பட்டலந்த விசாரணை குறித்து சத்தியலிங்கத்தின் அவசர கோரிக்கை | Sathyalingam S Request In The Patalanta Issue

இதுபோன்ற பல அறிக்கைகள் வடக்கு மற்றும் கிழக்கில் நிலவிய யுத்த காலத்தின் போதும், மக்கள் விடுதலை முன்னணியின் எழுச்சிக் காலத்தின் போதும், நடைபெற்ற மனித குலத்திற்கு எதிரான யுத்தக் குற்றங்கள் போன்ற பல விடயங்களைக் கொண்ட பல்வேறு அறிக்கைகள், பட்டலந்த அறிக்கையைப் போன்று பல வருடங்களாக ஆராயப்படாமல் களஞ்சியங்களில் இருக்கின்றன.

இவ்வாறான அறிக்கைகளை நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வந்து அவற்றை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு அதனை அப்படியே கைவிட்ட வரலாறுகள் உள்ளன.

கிழக்கில் பாரிய ஊழல் மோசடியில் சிக்கிய சாணக்கியன் : அம்பலமான குற்றச்சாட்டு

கிழக்கில் பாரிய ஊழல் மோசடியில் சிக்கிய சாணக்கியன் : அம்பலமான குற்றச்சாட்டு

முறையான விசாரணை

அதனால் இந்த அறிக்கையை விவாதிப்பது மட்டுமன்றி அறிக்கையில் குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிரான முறையான விசாரணைகளை நடத்த வேண்டும், அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

அவர்களைப் பொறுப்புக் கூறுபவர்களாக இருக்க வேண்டும், இந்தப் பொறுப்புக்கூறலை ஏற்படுத்துவதன் ஊடாக இவ்வாறான குற்றங்கள் மீள ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டலந்த விசாரணை குறித்து சத்தியலிங்கத்தின் அவசர கோரிக்கை | Sathyalingam S Request In The Patalanta Issue

இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிப் பகுதியில் இதேபோன்று மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், நீதிக்கு புறம்பான கொலைகள், காணாமல் ஆக்கப்படுதல், உறவுகளால் கையளிக்கப்பட்டவர்கள் வீடு திரும்பாமை, போர்க் குற்றங்கள் போன்றவை பல அறிக்கைகளில் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆனால், அந்த அறிக்கைகளை எடுத்து நடவடிக்கை எடுக்கும் போது நாட்டுக்காகப் போராடியவர்களைக் காட்டிக்கொடுப்பதாக இங்குள்ள அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.  

சற்றுமுன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கெஹெலிய

சற்றுமுன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கெஹெலிய

ஆணைக்குழுக்களின் அறிக்கைகள்

எத்தனை அறிக்கைகளை நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வருகின்றோம் என்பதில் பிரச்சினையில்லை.

ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமாக இருந்திருந்தால், யுத்தத்தின் இறுதிப்பகுதியில் போர்க்குற்றங்களைச் செய்தவர்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தோர் பயத்திலேயே அதைச் செய்திருக்க மாட்டார்கள்.

பட்டலந்த விசாரணை குறித்து சத்தியலிங்கத்தின் அவசர கோரிக்கை | Sathyalingam S Request In The Patalanta Issue

எவ்வாறாயினும் அறிக்கைகளில் உள்ள முடிவுரைகளுக்கமைய சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதன் ஊடாக நாட்டில் இவ்வாறான குற்றங்கள் மீள நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது.

நாங்கள் அரசியல் காரணங்களுக்காக மட்டும் இந்த அறிக்கைகளைப் புரட்டாமல், இந்த நாடு ஒரு அமைதியான எல்லா மக்களும் வாழக் கூடிய நாடாக மாற வேண்டுமாக இருந்தால் இந்த ஆணைக்குழு அறிக்கையில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த இந்த அரசாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024