மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்
அஸ்வெசும பயனாளிகளின் கொடுப்பனவு குறித்து அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அஸ்வெசும பயனாளிகளுக்கான ஏப்ரல் மாதத் தவணைக்கான பணம் இன்று (11.04.2025) அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர கொடுப்பனவு
நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும், 1,737,141 பயனாளிகளின் கணக்குகளுக்கு 12.63 பில்லியன் பணம் மாற்றப்படும்.
குறித்த பயனாளி குடும்பங்களில் வசிக்கும் 70 வயதை கடந்த 580,944 நபர்களுக்காக ரூபாய் பில்லியன் 2.9 மொத்தத் தொகை வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.
மேலும், வயது வந்தோருக்கான மாதாந்திர கொடுப்பனவு இந்த மாதத்திலிருந்து ரூ. 3,000 இலிருந்து ரூ. 5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
