சாணக்கியன் எம்.பிக்கு விடுக்கப்பட்ட பகிரங்க சவால்
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு (Shanakiyan Rasamanickam) சமூக செயற்பாட்டாளர் ஒருவரால் பகிரங்கமான சவால் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது மூடி மறைக்கப்பட்டிருந்த பல குற்றங்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்ட வண்ணம் உள்ளன.
அதேபோன்று அந்த குற்றங்களுக்கு பின்னணியில் இருந்த பல அரசியல் தலைகளும் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறிவில் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் சகாக்களே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, சமூக செயற்பாட்டாளர் கி.வதனகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடறுப்பு நிகழ்ச்சியில் தெரிவித்தவற்றை கீழுள்ள காணொளியில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
