சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: வைத்தியர் அர்ச்சுனா இழைத்த பெரும் தவறு
ஒரு நிறுவனத்திற்கு கீழ் நடக்கின்ற முறைகேடுகளை எந்தவொரு ஆதாரமும் இன்றி மக்களிடம் முன் வைத்து பகிரங்கமாக குற்றம் சாட்டுவது தவறான செயலாகும் என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நிர்வாக சீர்கேடு
அத்துடன், வைத்தியர் அர்ச்சுனா குறிப்பிட்ட சில மருத்துவர்களின் பெயர்களை சொல்லி பகிரங்கமாக குற்றம் சாட்டியமை ஒரு மூளைசாலி செய்கின்ற செயலாக கருத முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சாவகச்சேரி வைத்தியசாலையில் முறைகேடுகள் நிர்வாக சீர்கேடுகள் இல்லையேன்று யாராலும் சொல்ல முடியாது என்றும் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வைத்தியர் அர்ச்சுனாவிற்கு யாருக்குமே கிடைக்காத ஊடக வெளிச்சமொன்று கிடைத்துள்ள நிலையில் அவர் புகழ் போதைக்கு அடிமையாகிவிட்டாரா என்ற ஐயப்பாடு எழுகிறது என்றும் அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவித்த விடயங்கள் கீழுள்ள காணொளியில்..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |