சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் குழப்பநிலை

Sri Lanka Police Jaffna Hospitals in Sri Lanka
By Shalini Balachandran Jul 07, 2024 06:52 PM GMT
Report
புதிய இணைப்பு

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனாவை இரவோடு இரவாக கைது செய்ய வந்த காவல்துறையினர் மக்களின் பாரிய எதிர்ப்பை அடுத்து அவரை கைது செய்யவில்லை.   

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் குழப்பநிலை | Savagacherry Hospital Dr Arjuna Arrest Tension

இரண்டாம் இணைப்பு

சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நாளை போராட்டம் நடைபெறவுள்ள நிலையில் இரவோடு இரவாக பதில் வைத்திய அத்தியட்சகரை அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டமையினால்  பொதுமக்கள் வைத்தியசாலை முற்றுகையிட்டுள்ளனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண நேற்று (07) இரவு குறித்த கடிதத்தை பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது அதனை ஏற்க மறுத்துள்ள வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் : கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பூரண ஆதரவு

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் : கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பூரண ஆதரவு

பொது அமைப்பு

இதேவேளை வைத்தியசாலை பதில் அத்தியட்சகரை கைது செய்யும் வகையில் வைத்தியசாலையில் சாவகச்சேரி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, தான் மட்டுமே வைத்தியசாலையில் கடமையில் நிற்பதால் தன்னை கைது செய்து அழைத்துச் சென்றால் அந்த சமயத்தில் வைத்தியசாலையில் எதாவது உயிரிழப்பு ஏற்பட்டால் தானே பொறுப்பு என காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளதுடன் இன்று (08) சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் போராட்டம் நடைபெறவுள்ள நிலையில் இரவோடு இரவாக வைத்திய அத்தியட்சகரை அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் குறித்த விடயம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் தொடரும் சர்ச்சை: மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் தொடரும் சர்ச்சை: மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

முதலாம் இணைப்பு

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனாவை பலாத்காரமாக கைது செய்வதற்கு காவல்துறையினர் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர், சாவகச்சேரி காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் சென்றிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

பலாத்காரமாக கைது 

அத்தோடு, வைத்தியசாலையின் பிரதான மின் கட்டமைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் குழப்பநிலை | Savagacherry Hospital Dr Arjuna Arrest Tension

மேலும், வைத்தியசாலையில் இருந்த ஊடகவியலாளர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன் எந்நேரமும் பதற்றநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி வைத்தியர் அர்ச்சுனாவுடன் முரண்பட்ட சட்ட வைத்திய அதிகாரி: கசிந்த உரையாடல் பதிவு

சாவகச்சேரி வைத்தியர் அர்ச்சுனாவுடன் முரண்பட்ட சட்ட வைத்திய அதிகாரி: கசிந்த உரையாடல் பதிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016