சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் : கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பூரண ஆதரவு

Jaffna Sri Lanka SL Protest
By Sathangani Jul 07, 2024 12:14 PM GMT
Report

"சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மீள் எழுச்சிக்காக ஒன்றிணைவோம்" என்ற தொனிப்பொருளில் நாளைய தினம் (08) தென்மராட்சி பூராகவும் இடம்பெறவுள்ள பூரண கடையடைப்பிற்கும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக இடம்பெறுகின்ற கண்டன எதிர்ப்பு போராட்டத்திற்கும் தென்மராட்சி சமூக பொது அமைப்புகளின் ஒன்றியம் பூரண ஆதரவை கூட்டாக வழங்குகின்றது.

குறித்த போராட்டத்தில் எமது சமூக பொது அமைப்புகளின் அங்கத்தவர்கள் அனைவரும் முழுமையாக பங்கெடுப்பார்கள் என தென்மராட்சியில் இயங்குகின்ற சமூக, பொது அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ”கடந்த காலங்களில் எமது மண்ணில் இடம்பெற்ற அனைத்து போராட்டங்களுக்கும் தென்மராட்சியில் உள்ள ஒவ்வொரு சமூக மற்றும் பொது அமைப்புகள் அனைத்தும் தனித்தனியாகவே எமது ஆதரவை தெரிவிப்பது வழமை.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கி தயார் : அங்கஜன் அறிவிப்பு

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கி தயார் : அங்கஜன் அறிவிப்பு

மக்கள் ஆதரவு 

ஆனால் நாளை முன்னெடுக்கப்படுகின்ற போராட்டமானது மனிதாபிமானத்தையும் எமது மக்கள் அனைவரினதும் இலவச சிகிச்சை உரிமையையும் வலியுறுத்தி முன்னெடுக்கப்படுவதால் தென்மராட்சியில் உள்ள அனைத்து சமூக பொது அமைப்புகள் ஆகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டாக ஆதரவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் : கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பூரண ஆதரவு | Chavakachcheri Hospital Issue Support For Protest

எனவே தென்மராட்சியில் உள்ள சிறிய வியாபாரிகள் முதல் பாரிய வர்த்தகர்கள் மற்றும் அனைத்து தொழில் அமைப்புகளும் பூரண பங்களிப்பை வழங்குவோம் என்பதை உரிமையோடு தெரிவித்துக் கொள்கின்றோம்“ என அவர்களின் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் தொடரும் சர்ச்சை: மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் தொடரும் சர்ச்சை: மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

30 அமைப்புகள் ஆதரவு 

அந்தவகையில் சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் கழகம், கொடிகாமம் வர்த்தக சங்கம், தனியார் சிற்றூர்திச் சேவைச் சங்கம் தென்மராட்சி,  முச்சக்கரவண்டிச் சங்கம் சாவகச்சேரி, முச்சக்கர வண்டிச் சங்கம் கொடிகாமம், முச்சக்கர வண்டிச் சங்கம் கைதடி, தனியார் கல்வி நிலையங்களின் ஒன்றியம் தென்மராட்சி, கடற்றொழில் சங்கம் கச்சாய், லிகோரியார் கடற்றொழில் சங்கம் சாவகச்சேரி, சிகையலங்கரிப்பாளர் சங்கம் தென்மராட்சி, சலவைத் தொழிலாளர் சமாசம் தென்மராட்சி, சனசமூக நிலையங்களின் ஒன்றியம் தென்மராட்சி, கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம் தென்மராட்சி, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் ஒன்றியம், பனை,தென்னை கூட்டுறவுச் சங்க தொழிலாளர்களின் சமாசம், கமக்காரர் அமைப்புக்களின் ஒன்றியம் தென்மராட்சி, சிறுதொழில் முயற்சியாளர் ஒன்றியம் தென்மராட்சி, குடிசைக் கைத்தொழில் மேம்பாட்டு இணையம் தென்மராட்சி, சந்தை வியாபாரிகள் சங்கம் சாவகச்சேரி, சந்தை வியாபாரிகள் சங்கம் கொடிகாமம், நகர வரியிறுப்பாளர் ஒன்றியம் சாவகச்சேரி, மீன் சந்தை வியாபாரிகள் ஒன்றியம் சாவகச்சேரி, மின்னியலாளர் சமாசம் சாவகச்சேரி, இளைஞர் கழகங்களின் சம்மேளனம் தென்மராட்சி, விளையாட்டுக் கழகங்களின் சமாசம் தென்மராட்சி, கால்நடை வளர்ப்பாளர் கூட்டுறவுறவுச் சங்கம் தென்மராட்சி, தனியார் பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் - தென்மராட்சிக் கிளை, உணவக உரிமையாளர் சங்கம் சாவகச்சேரி, முன்பள்ளி ஆசிரியர்கள் இணையம் தென்மராட்சி, உள்ளூர் பழ,மர உற்பத்தியாளர் சங்கம் கொடிகாமம் என தென்மராட்சியின் 30 சமூக பொது அமைப்புக்கள் ஆதரவு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் : கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பூரண ஆதரவு | Chavakachcheri Hospital Issue Support For Protest

வைத்தியர் அர்ச்சுனா மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

வைத்தியர் அர்ச்சுனா மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011