நீதிமன்றில் இருந்து தப்பி ஓடிய சந்தேக நபர்கள்..! மீள ஒருவர் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
தப்பி ஓட்டம்
சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் இருந்து இரு சந்தேக நபர்கள் தப்பி ஓடிய நிலையில் ஒருவர் மீள கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றையவர் தலைமறைவாகியுள்ளார்.
போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் நேற்றைய தினம் புதன்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை , மன்று இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் சிறைக்காவலர்களின் பாதுகாப்பில் இருந்து இருவரும் தப்பியோடியுள்ளனர்.
ஒருவர் கைது
தப்பியோடியவர்களை சிறைக்காவலர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து துரத்திய போது ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மற்றையவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
தப்பி சென்றவரை கைது செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

