கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய நபர் - வெளியான காரணம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Colombo Bandaranaike International Airport) உள்ள வாகன தரிப்பிடத்தில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 118 வெளிநாட்டு மதுபான போத்தல்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான போக்குவரத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (05) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கொழும்பை (Colombo) மையமாக கொண்டு மதுபான வியாபாரம் செய்யும் வர்த்தகர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதிக விலைக்கு விற்பனை
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் கொண்டு வரும் மது போத்தல்களை விமான நிலைய வாகன தரிப்பிடத்தில் குறைந்த விலைக்கு பெற்று இலங்கை முழுவதும் உள்ள சுற்றுலா விடுதிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விற்பனைக்காக தயார்படுத்தியிருந்த 99 மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (06) நீர்கொழும்பு (Negombo) நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |