வேலை வாய்ப்பு என்ற பெயரில் பாரிய மோசடி : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சிறிலங்கா சுங்கத்துறையில் (Sri Lanka Customs) வேலை பெற்றுத் தருவதாக கூறி பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுங்கத் திணைக்களம் பொது மக்களை அறிவறுத்தியுள்ளது.
குறித்த மோசடி தொடர்பில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் சீவலி அருக்கொட (Seevali Arukgoda) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அரச துறைக்கு போட்டிப் பரீட்சை எழுதுபவர்களை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போட்டிப் பரீட்சை
இலங்கை சுங்கத் திணைக்களத்தில் இணைவதற்கு அவ்வாறானதொரு முறை இல்லை எனவும் போட்டிப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்களே பணிக்கு அமர்த்தப்படுவர் எனவும் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பாக மக்களை அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |