நாட்டை விட்டு வெளியேறும் தொழில்நுட்ப வல்லுநர்கள்: கடும் நெருக்கடியில் வைத்தியசாலைகள்
கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றாக்குறை காரணமாக பல மருத்துவமனைகளின் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, குருநாகல் பொது வைத்தியசாலை, பதுளை பொது வைத்தியசாலை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அதன் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
நிரந்தர அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறியமையே இதற்குக் காரணம் என சானக தர்மவிக்ரம மேலும் குறிப்பிட்டார்.
உரிய நடவடிக்கை
இந்த நிலை தொடருமானால் வைத்தியசாலைகள் கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் கூறியிருந்தார்.
எனவே இந்தப் பிரச்சினையை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |