யாழில் சிறுமியிடம் அத்துமீறிய பிக்கு...! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
யாழில் சிறுமியிடம் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிக்குவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நீதிமன்றம் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதனடிப்படையில், ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
வீட்டுப் பாவனை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், அண்மையில் வீட்டுப் பாவனைக்காக விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார்.
இதன்போது, அங்கு நின்ற பௌத்த பிக்கு ஒருவர் அச்சிறுமியிடம் அநாகரிகமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

குறித்த வழக்கு நேற்றைய தினம் (02-04-2026) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்