மகிந்தவின் காற்றில் நாமலின் வாசம் வீசும்.... மொட்டுக்கட்சி உறுதி
மகிந்தவின் (Mahinda) காற்றில் நாமலின் (Namal) வாசம் வீசும் என்பதில் சந்தேகமில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன (Sanjeeva Edirimanna) தெரிவித்துள்ளார்.
நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சஞ்சீவ எதிரிமான்ன இவ்வாறு குறிப்பிட்டார்.
மகிந்தவின் காற்றில் நாமலின் வாசம் (Mahinda Sulangin Namal Suwanda) என்ற தலைப்பில் ஒரு புதிய அரசியல் முயற்சி விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) வட்டாரங்கள் அண்மையில் தெரிவித்திருந்தன.
பதிலளித்த சஞ்சீவ எதிரிமான்ன
இது தொடர்பில் சஞ்சீவ எதிரிமான்னவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அந்தக் காற்றுக்கு இன்னும் பெயர் இல்லை, ஆனால் அந்தக் காற்று நிச்சயமாக வீசும், அது நிலையானது என்று கூறினார்.
அத்துடன் மகிந்தவின் காற்று என்ற பெயர் உண்மையில் ஒரு பிரசாரமாகத் தொடங்கப்படவில்லை, அது இயற்கையாகவே சமூகத்திலிருந்து வந்தது என சுட்டிக்காட்டினார்.
இதேவேளை ஜனாதிபதி பதவியை இழந்த பிறகு “Mahinda Sulanga” இயக்கம் தொடங்கப்பட்டது போலவே, குறித்த புதிய அரசியல் முயற்சியும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
