விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை ஆரம்பித்து வைத்த கிழக்கு ஆளுநர்
Batticaloa
Ranil Wickremesinghe
S. Viyalendiran
Sri Lanka
Senthil Thondaman
By Sathangani
விவசாயம் மற்றும் விவசாயிகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் ஒன்று மட்டக்களப்பு (Batticaloa) மண்முனை தெற்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) ஆரம்பித்து வைத்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) தொலைநோக்கு பார்வையின் கீழ் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குளிர்சாதனக் கிடங்குகள்
விவசாயச் சங்கங்கள் தங்களுடைய மரக்கறிகள் மற்றும் பழங்களை சேமித்து வைத்து நல்ல விலையைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான குளிர்சாதனக் கிடங்குகள் மண்முனை தெற்கில் ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் (S. Viyalendiran) உட்பட அரச அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்