விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : இரட்டிப்பாகும் மானியம்
தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரமிடுவதற்கு அரசாங்கம் வழங்கத் தீர்மானித்த 2000 ரூபா மானியத் தொகையை 4000 ரூபாவாக அதிகரிக்க விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானம் இன்று (29) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரமிடுவதற்கு விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக 2000 ரூபா மானியம் வழங்குவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்ட போதிலும், தேயிலை உற்பத்தியை அதிகரிக்க அந்த தொகை போதுமானதாக இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
உர மானியம்
இதன்படி, எதிர்வரும் பருவத்தில் இருந்து இந்த உர மானியம் வழங்கப்படவுள்ளது.
தேயிலை உரத்தின் விலையை 2000 ரூபாவினால் குறைத்து, உற்பத்திச் செலவு மற்றும் இலாப விகிதத்தை கருத்திற்கொண்டு அரச உர நிறுவனம் விசாரணை நடத்தி விலையை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மானியத்திற்காக 2 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதுடன், அந்த தொகையை இலங்கை தேயிலை சபையின் நிதியின் ஊடாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர இன்று (29) அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளார்.
You May Like This Video
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |