அமைச்சுப் பதவியிலிருந்து விலகினார் விஜயதாச ராஜபக்ச
Dr Wijeyadasa Rajapakshe
Sri Lanka
Ministry of justice Sri lanka
Sri Lanka Presidential Election 2024
By Sathangani
8 months ago
சிறிலங்காவின் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
கொழும்பில் (Colombo) இன்று (29) காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியபோதே அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது நீதியமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக விஜயதாச தெரிவித்துள்ளார்.
மக்கள் கூட்டணியின் சார்பில் வேட்பாளராகக் களமிறங்குவதாகவும், சின்னத்தை பின்னர் அறிவிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக விஜயதாச ராஜபக்ச செயற்படுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்