ஜனாதிபதி தேர்தல் : தபால் திணைக்களம் கோரும் பில்லியன் கணக்கான பணம்
Election Commission of Sri Lanka
Sri Lanka
Sri Lanka Presidential Election 2024
By Sathangani
ஜனாதிபதித் தேர்தலுக்கான (Presidential Election) தபால் திணைக்களத்தின் செலவினங்களை மதிப்பீடு செய்து 1.4 பில்லியன் ரூபாய் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு (Election Commission) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க (Rajitha Ranasinghe) இன்று (29) இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
செலவுகள் குறித்த மதிப்பீடு
பொது அஞ்சல் கட்டணம், பதிவு செய்யப்பட்ட அஞ்சல் கட்டணம், எழுதுபொருட்களுக்கான செலவுகள், போக்குவரத்து செலவுகள் மற்றும் நிர்வாகக் கட்டணங்கள் உள்ளிட்ட பல செலவுகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இந்த மதிப்பீடு ஒரு முன்னறிவிப்பு மட்டுமே என்பதால், கோரப்பட்ட பணத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி