குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரிசி வழங்கப்படவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இருந்து மாதாந்தம் 10 கிலோ வரையிலான அரிசி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயத்தை ஊவா பரணகம அம்பகஸ்தோவ விளையாட்டரங்கில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான தேசிய அரிசி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் கூறியுள்ளார்.
குறைந்த வருமானம்
அத்தோடு அரசியல்வாதிகளால் விநியோகிக்கப்படும் பொருட்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் மக்கள் வாக்களிக்க மாட்டார்களென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
களனியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
இதனுடன் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்கவை அதிபராக மக்கள் ஏற்கனவே தெரிவு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு ஊடக கேள்வியொன்றுக்கு பதில் அளித்த பிரசன்ன ரணதுங்க, தேர்தலை இலக்கு வைத்து அரிசி விநியோகம் செய்யவில்லையெனவும் மற்றும் பல்வேறு அரசியல் சித்தாந்தங்களை கொண்டவர்கள் இந்த திட்டத்தால் பயனடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் ரணில் விக்ரமசிங்கவை தேர்ந்தெடுத்துள்ளமையினால் மாத்திரமே நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க முடிவதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |