கொழும்பை உலுக்கிய மாணவன், மாணவியின் மரணம்: விசாரணையில் வெளியான தகவல்

Sri Lanka Police Crime Branch Criminal Investigation Department Crime Death
By Thulsi Jul 05, 2024 05:07 AM GMT
Report

கொம்பனித்தெருவில் (Slave Island) உள்ள அல்டெயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த மாணவி உயரமான இடங்களில் புகைப்படம் எடுப்பதில் நாட்டம் கொண்டுள்ளவர் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

மேலதிக விசாரணைகள் கொம்பனித் தெரு காவல் நிலைய பொறுப்பதிகாரி கபில விஜேமான்ன (Kapila Wijemanna) தலைமையில் இடம்பெற்று வருகின்றது. 

இந்நிலையில் உயிரிழந்த 15 வயது மாணவன் மற்றும் மாணவியின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கையை உலுக்கிய மாணவி - மாணவன் மரணம்: வெளிவராமல் தொடரும் பின்புலம்

தென்னிலங்கையை உலுக்கிய மாணவி - மாணவன் மரணம்: வெளிவராமல் தொடரும் பின்புலம்

நெருங்கிய நண்பர்கள் 

குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பில் (colombo) உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் இருவரே உயிரிழந்துள்ளனர்.

கொழும்பை உலுக்கிய மாணவன், மாணவியின் மரணம்: விசாரணையில் வெளியான தகவல் | School Boy And Girl Jump 67 Floor Altair Apartment

அவர்களின் சடலங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் 03வது மாடியில் குளிரூட்டிகள் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதுடன், இயந்திரங்களில் விழுந்துள்ளதாக உடல்கள் சிதைவடைந்திருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாணவனும் மாணவியும் நெருங்கிய நண்பர்கள் என காவல்துறையினர் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பகடைக்காயாக செயற்படும் மருத்துவர் கேதீஸ்வரன் : அம்பலப்படுத்தும் அதிர்ச்சி காணொளி

யாழ்ப்பாணத்தில் பகடைக்காயாக செயற்படும் மருத்துவர் கேதீஸ்வரன் : அம்பலப்படுத்தும் அதிர்ச்சி காணொளி

உயரமான இடங்களில் புகைப்படம்

மேலும், குறித்த மாணவி உயரமான இடங்களில் புகைப்படம் எடுப்பதில் நாட்டம் கொண்டுள்ள நிலையில், அவரது கைப்பேசியில் இதுபோன்ற பல புகைப்படங்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, அவ்வாறான புகைப்படங்களை எடுக்க முற்பட்ட போது இருவரும் 67வது மாடியில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும், விபத்து ஏற்படுவதற்கு முன்னர் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் நிலவுவதாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பதுளையில் தவறான முடிவெடுத்த பெண்

பதுளையில் தவறான முடிவெடுத்த பெண்

காவல்துறையினர் விசாரணை

அல்டெயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பிற்கு செல்வதற்கு அங்கு வசித்த அவர்களது நெருங்கிய நண்பர் ஒருவரால் அனுமதி வழங்கப்பட்டது.

கொழும்பை உலுக்கிய மாணவன், மாணவியின் மரணம்: விசாரணையில் வெளியான தகவல் | School Boy And Girl Jump 67 Floor Altair Apartment

அந்த நண்பர் காரணமாக மாணவன் மற்றும் மாணவி அடிக்கடி குடியிருப்புத் தொகுதிக்கு வந்து செல்லும் நிலையில், அன்றைய தினம் அங்கு வருவதை பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை என காவல்துறையினர் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மகள் வீட்டிற்கு வர தாமதமானதால், அவரது தந்தை மாணவனுக்கு அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் அவர் தன்னுடன் இல்லை என்று கூறியுள்ளார்.

வெளியான செய்திகள் பொய்யானவை

எனினும் இது தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்படும் என குறித்த மாணவியின் தந்தை கூறியதையடுத்து எழுந்த அச்சம் காரணமாக இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்தார்களா என்பது தொடர்பிலும் விசாரணை அதிகாரிகளின் கவனம் செலுத்தியுள்ளனர்.

கொழும்பை உலுக்கிய மாணவன், மாணவியின் மரணம்: விசாரணையில் வெளியான தகவல் | School Boy And Girl Jump 67 Floor Altair Apartment

மேலதிக விசாரணைகளுக்காக மாணவன் மற்றும் மாணவியின் கைப்பேசிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 இதேவேளை, சம்பவத்தன்று மாணவி பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தமிழர் தலைநகரில் மாயமான யுவதி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

தமிழர் தலைநகரில் மாயமான யுவதி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026