பாடசாலைகளுக்குள் களமிறக்கப்படுகிறதா விசேட அதிரடிப்படை - அமைச்சின் செயலாளரின் அறிவிப்பு!
கொழும்பு மாவட்டத்திலேயே ஹெரோயின் போதைப்பொருள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமன்றி பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் சமூகத்தினரிடையே போதைப் பொருட்களை விநியோகிப்பதற்கான பல்வேறு திட்டங்கள் கடத்தல்காரர்களினால் ஆரம்பித்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆகவே, பாடசாலைகளில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு விசேட செயலணியொன்றை ஸ்தாபிக்கின்றமை தொடர்பில் சிறிலங்கா அதிபர் கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசேட செயலணி

கொழும்பில் நேற்றைய தினம் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி, ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு மேலதிகமாக குருநாகல் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.
கிலோ கணக்கில் கைப்பற்றப்படும் போதைப்பொருள்

ஆகவே காவல்துறை விசேட அதிரடிப்படையினர் ஏனைய கடமைகளில் இருந்து நீக்கப்பட்டு, எதிர்காலத்தில் போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் குழுக்களுக்கு எதிராக மாத்திரம் பயன்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் வருடாந்தம் சுமார் 1100 முதல் 2000 கிலோகிராம் வரையான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்படுகின்றது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.