இன்று முதல் பாடசாலை விடுமுறை : கல்வியமைச்சு அறிவிப்பு
புதிய இணைப்பு
2024 ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் (22) முடிவடைவதாக கல்வி அமைச்சு (Ministry of Education) தெரிவித்துள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் 12.13, 2024 வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளதுடன் அன்றைய தினம் பாடசாலை விடுமுறைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்துப் பாடசாலைகளிலும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகி 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது
முதலாம் இணைப்பு
2024 ஆண்டு பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளையுடன் (22.11.2024) நிறைவடைகின்றன.
இதற்கமைய, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன.
கல்வியமைச்சு
இதன்படி, அனைத்து பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு (Sri Lankan Ministry of Education) தெரிவித்துள்ளது.
இதேவேளை 2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர (G.C.E(A/L)) பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில், கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
பரீட்சைகள் திணைக்களம்
இருந்த போதிலும், இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் கடந்த மார்ச் மாதம் எடுத்த தீர்மானத்தின் படி, உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த பரீட்சை நடைபெறும் திகதிகளுக்கு அமைய, அடுத்து வரும் சாதாரணதர பரீட்சை உள்ளிட்ட பல பரீட்கைகளுக்கான திகதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டால், ஏனைய பரீட்சைகளுக்கான திட்டமிடல் முற்றிலும் ஒழுங்கற்றதாக மாறிவிடும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |