கனடாவில் பாடசாலை அதிபரின் அநாகரிக செயற்பாடு - விதிக்கப்பட்டது தடை
British Columbia
Canada
By Sumithiran
கனடாவில் தனியார் பாடசாலை அதிபர் ஒருவரின் அநாகரிக செயற்பாடு காரணமாக அவர் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் நானாஈமோ பகுதியில் அமைந்துள்ள தனியார் பாடசாலையில் அதிபராக கடமையாற்றி வந்த மாக் லோயஸ் பிரியோட்டி என்ற அதிபருக்கே கல்வி செயற்பாட்டில் ஈடுபட 15 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுவனுக்கு அனுப்பப்பட்ட ஆபாச படங்கள்

சிறுவன் ஒருவனுக்கு ஆபாச படங்களை அனுப்பியதாக அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையிலேயே இந்த தடைவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.
15 வயது சிறுவன் ஒருவனுடன் பாலியல் ரீதியான தொடர்பு வைத்திருப்பது சட்டவிரோதமானது என்பது குறித்த அதிபருக்கு தெரியும் எனவும் இதனால் அவரை கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடை விதிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி