திடீரென மயங்கி விழுந்த 4 மாணவர்கள்! விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
Sri Lanka
Sri Lankan Schools
By pavan
இப்பாகமுவ பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் 4 மாணவர்கள் மரத்தடியில் மயங்கி விழுந்த நிலையில் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை விசாரணை
இந்த நான்கு மாணவர்களும் மரத்தடியிலிருந்து ஏதோ மாத்திரைகளை உட்கொண்டதாக அங்கிருந்த ஏனைய மாணவர்கள் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மாத்திரைகளை யாராவது இவர்களுக்குக் கொடுத்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்