தமிழர் பகுதியில் துயரம் - பாடசாலை விடுதியில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த ஆசிரியர்
கிளிநொச்சி (Kilinochchi) பகுதியில் ஆசிரியர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த துயர சம்பவம் நேற்று இரவு கிளி/ சென் திரேசா மகளிர் கல்லூரியின் ஆசிரியர் விடுதியில் இடம்பெற்றுள்ளது.
திருவையாறு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் பேரம்பலம் பரந்தாமன் என்ற ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
கிளிநொச்சி - திருவையாறு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் பேரம்பலம் பரந்தாமன் ஆசிரியர் கிளிஃ சென்திரேசா மகளிர் கல்லூரியின் ஆசிரியர் விடுதியில் தங்கியிருந்த குறித்த ஆசிரியர் நேற்று இரவு தனக்குத் தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி ஜீவநாயகம் விசாரணை செய்துள்ளார்.
பின்னர் உடல் பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனை பின்னர் உறவினரிடம் கையளிக்கப்படும் என கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
