மாணவனின் காதை பதம் பார்த்த சக மாணவன் கைது
13 வயது பாடசாலை மாணவனின் காது பகுதியில் கடுமையாக தாக்கிய 14 வயது பாடசாலை மாணவன் இங்கிரிய காவல்துறைனரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மாணவர் இங்கிரிய, 20 அக்கரை பகுதியைச் சேர்ந்தவர், பாதிக்கப்பட்டவர் இங்கிரிய மருத்துவமனைக்கு அருகில் வசிக்கும் மாணவர்.
இரண்டு மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம்
சம்பவத்தின்படி, எட்டாம் வகுப்பில் படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு இடையே ஒரு சிறிய வாக்குவாதம் நடந்ததாகவும், அதில் ஒருவர் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் தனது நண்பரிடம் சம்பவம் குறித்த விவரங்களை கூறியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் ஒன்பதாம் வகுப்பு மாணவன், சம்பவத்தை தனக்குச் சொன்ன மாணவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு மாணவனின் காதில் குத்தியதாகவும், தாக்கப்பட்ட மாணவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாட்டை அடுத்து மாணவன் கைது
தாக்கப்பட்ட மாணவனின் குடும்ப உறுப்பினர்கள் அவரது நிலை குறித்து தடயவியல் மருத்துவ அறிக்கையுடன் இங்கிரிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பின்னர், தாக்கப்பட்ட மாணவர் இங்கிரிய காவல் நிலையப் பொறுப்பதிகாரி, தலைமை காவல்துறை பரிசோதகர் கே.ஏ.என்.டி. கொல்லூராவின் வழிகாட்டுதலின் கீழ் கைது செய்யப்பட்டு, காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டு, ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
