வளர்ப்பு நாயால் மாணவனுக்கு நேர்ந்த துயரம்
Galle
Hospitals in Sri Lanka
By Sumithiran
வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்டு காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏழு வயது பாடசாலை மாணவன் இன்று (27)உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாணவர் கடந்த 24 ஆம் திகதி சுகவீனம் காரணமாக காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாய் கடித்ததை குடும்பத்தினரிடம் மறைத்த மாணவன்
கடந்த மாதம், வீட்டில் இருந்த ஒரு வளர்ப்பு நாய் மாணவனின் பிறப்புறுப்பைக் கடித்தது, இதனை மாணவர் குடும்பத்தினரிடம் சொல்லாமல் கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டதாகக் கூறினார்.
பின்னர், தண்ணீர் மற்றும் காற்றின் பயம் காரணமாக மாணவனின் அறிகுறிகள் மோசமடைந்ததால், மாணவன் சிகிச்சைக்காக காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
காலி தேசிய மருத்துவமனையில் இன்று (27) பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்