நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை: சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான அறிவிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாளை (27) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு நடைபெறும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, உரிய பரீட்சை நிலையங்களில் செய்முறைப் பரீட்சைகள் எவ்வித மாற்றமுமின்றி நடைபெறும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் அல்லது அசௌகரியங்கள் ஏற்பட்டால், மாணவர்கள் தத்தமது கல்வி வலயங்களின் வலயக் கல்விப் பணிப்பாளர்களைத் தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம்
மேலதிக தகவல்களுக்கு பரீட்சார்த்திகள் மற்றும் பெற்றோர் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகப் பரீட்சைகள் திணைக்களத்தைத் தொடர்புகொள்ளலாம்.

அவசரத் தொலைபேசி இலக்கம்: 1911
தொலைபேசி இலக்கங்கள்: 011 2784208 / 011 2784537
தொலைநகல் இலக்கம்: 011 2784422
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |