அழியப்போகும் பூமி: விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு பூமி மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி(Delhi) மெயில்(Mail) அறிக்கையின்படி, பிரிஸ்டல்(Bristol) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியில் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விரைவில் அழிவு
இது தொடர்பாக விஞ்ஞானிகள் தெரிவிக்கையில், “பூமியில் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் மறைந்துவிடுவதுடன் அந்த நேரத்தில் பூமியின் வெப்பநிலை 70 டிகிரி செல்ஸியஸை(Degrees Celsius) எட்டும்.
அத்தகைய சூழலில் பூமியில் எந்த உயிரினமும் வாழ இயலாது அனைத்தும் வெப்பத்தின் காரணமாக அழிந்துவிடும் அத்தோடு பூமியில் நாம் காபனை(Carbon) வெளியேற்றும் வேகத்தின் காரணமாக இந்த அழிவு விரைவில் நிகழ வாய்ப்புள்ளது.
டைனோசர்கள் அழிவு
66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல நிகழ்ந்திருக்கலாம் அத்தோடு அதன் காரணமாக டைனோசர்கள்(Dinosaurs) அழிந்திருக்கலாம்” என தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக இந்த ஆய்வு குழுவின் தலைவர் அலெக்சாண்டர் ஃபார்ன்ஸ்வோ(Alexander Farnsworth) தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “உலக அழிவின் போது உலகில் காபனீரொக்சைட்டின்(Carbon Dioxide) அளவு இப்போது இருப்பதை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கலாம்.
மனிதர்கள் இறப்பு
இதன் காரணமாக உடல் வெப்பமடைந்து மனிதர்கள் இறந்துபோகும் சூழல் உருவாகும் பின்னர் பூமியின் அனைத்து கண்டங்களும் ஒன்றிணைந்து ஒரு சூப்பர் கண்டத்தை உருவாக்கும் அது பாங்கேயா அல்டிமா(Pangea Ultima) என்று அழைக்கப்படும்.
பூமி முதலில் சூடாகவும், பின்னர் வறண்டதாகவும் மற்றும் இறுதியாக வாழத் தகுதியற்றதாகவும் மாறும் அதுமட்டுமன்றி வெப்பம் தாங்காமல் எரிமலைகள் வெடித்து சிதறி பூமியின் பெரும்பகுதி எரிமலையால் மூடப்பட்டிருக்கும்.
அவ்வாறு நிகழும்போது அது அதிக அளவு காபனீரொக்சைடை வெளியிடும் இதனால் மக்கள் சுவாசிக்க சிரமப்படுவதுடன் அதன்பிறகு படிப்படியாக பூமியில் ஒரு உயிரினம் கூட மிச்சமில்லாமல் மொத்தமாக அழிந்துவிடும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |