பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள இரகசியத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்...அது என்ன தெரியுமா!
பூமியில் கால அளவீட்டில் ஏற்படவுள்ள மாற்றம் கண்டறியப்பட்ட காலகட்டத்தில் பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் ஒரு பெரிய கடல் போன்ற அமைப்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்ட இந்த அமைப்பு கடல் இல்லை என்றும் அது மிகப்பெரிய பள்ளம் என்றும் ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பள்ளம் ஒரு சிறுகோள் அளவிற்கு காணப்படுவதாகவும், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் விழுந்த ஒரு விண்கல்லினால் இந்தப் பள்ளம் உருவாகியிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
பூமியை மோதிய விண்கல்
இந்தப் பள்ளமானது சுமார் 320 மைல் விட்டத்தை கொண்டது என்றும், இதே போன்ற ஒரு அமைப்பை கொண்ட ஒரு பள்ளம் தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் அது 100 மைல் விட்டத்தையே கொண்டுள்ளது இந்தப் பள்ளமும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியை மோதிய விண்கல்லின் விளைவால் நேர்ந்ததாக கூறப்படுகிறது, இதே போன்ற இன்னொரு அமைப்பு மெக்ஸிக்கோவிலும் கண்டறியப்பட்டுள்ளது அதுவும் விண்கல் பூமியை மோதிய கணத்தில் தோன்றிய பள்ளம் என்றே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டைனோசர்களின் அழிவு
இந்நிலையில், மற்றைய இரண்டு பள்ளங்களை காட்டிலும் அவுஸ்திரேலியாவிலுள்ள இந்த பள்ளம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது அது விண்கல் வீழ்ந்தால் உருவான இரண்டாவது மிகப்பெரிய பள்ளம் என்றும் குறிப்பிடபட்டுள்ளது.
ஏனென்றால் டைனோசர்களின் அழிவுக்கு காரணமான சிறுகோள் விழுந்த இடம் இதுவாக இருக்கலாம் என்றும், இந்த இடத்தில் பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் ஒரு பெரிய கடலே உருவாகியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |