பிரான்ஸ் காவல்துறையினர் மீது கத்திக்குத்து! சுட்டுக் கொல்லப்பட்ட தாக்குதல்தாரி
பிரான்ஸ் காவல்துறையினர் மீது கத்திக்குத்து நடத்திய நபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இச்சம்பவம் பிரான்ஸ் - கெனிஸ் நகரில் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சில காவல்துறையினர் வழக்கம் போல் பாதுகாப்பு பணிக்கு செல்வதற்காக காரில் ஏறி புறப்பட்டுக்கொண்டிருந்த வேளை திடீரென காவல்நிலையத்திற்குள் நுழைந்த நபர் காவல்துறையினர் அமர்ந்திருந்த காரின் கதவை திறந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து காரின் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இத் தாக்குதல் சம்பவத்தினால் காவல்துறை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து முன் ஆசானத்தில் அமர்ந்திருந்த மற்றொரு காவல்துறை அதிகாரி மீதும் கத்திக்குத்து தாக்குதல் நடத்த முயன்ற வேளையில் உடனடியாக காரின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த மற்றொரு அதிகாரி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
மேலும், குறித்த தாக்குதலில் காயமடைந்த காவல் அதிகாரி சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.