முப்படை தளபதிகள் மற்றும் காவல்துறை மா அதிபருக்கு அதிகபட்ச அதிகாரங்கள்
பொதுமக்களின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல்
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அதிகாரங்களை முப்படைகளின் தளபதிகள் மற்றும் காவல்துறை மா அதிபர் ஆகியோருக்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இராணுவத்தினரிடம் இருந்து திருடப்பட்ட துப்பாக்கிகளை விரைவில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இராணுவத் தளபதிகள் மற்றும் காவல்துறை மா அதிபருக்கு அதிகாரம் வழங்க இன்று (15) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருடப்பட்ட துப்பாக்கிகள் கிளர்ச்சியாளர்களின் கைகளில் சிக்குவது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் இதன்போது தெரிவிக்க்பட்டுள்ளது.
பதில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவை கூடியது.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
படையினருக்கு அதிகாரம்
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் எம்.பி.க்கள் சுதந்திரமாக சந்திப்பதற்கான உரிமையை பாதுகாப்பதற்கும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் திகதி நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினரிடம் இருந்து திருடப்பட்ட இரண்டு துப்பாக்கிகளையும் கண்டுப்பிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பாதுகாப்பு பிரிவிற்கு அதிகாரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
