யாழில் முளைத்த திடீர் பணக்காரர்கள் அச்சத்தில் - தீவிரமாகும் விசாரணை
யாழில் திடீர் பணக்காரர்கள் மற்றும் சட்டவிரோதமாக சொத்து குவித்தவர்கள் தொடர்பில் காவல்துறையினர் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
அந்தவகையில், குறுகிய காலத்தில் திடீர் பணக்காரர்கள் ஆகினார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் சிலரிடம் யாழ்ப்பாண குற்ற தடுப்பு காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை மா அதிபரின் கீழ் இயங்கும் காவல்துறை விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சிலரிடம் வாக்குமூலம்
யாழில் திடீர் பணக்காரர்களாகிய சுமார் 18 பேர் ஏற்கனவே காவல்துறை விசாரணை வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இவர்களில் சிலரை நீதிமன்றம் மூலம் அவர்களின் சொத்து விபரங்களை குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் சமர்ப்பிக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் அதிக சொத்துக்கள், போதைப் கடத்தல்கள் , மீட்டர் வட்டி , கப்பம் போன்றவற்றின் மூலம் திடீர் பணக்காரர்கள் ஆகினார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை மா அதிபரின் கீழ் இயங்கும் காவல்துறை விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |