மன்னாரில் கரையோர பகுதிகளில் உட்புகுந்தது கடல்நீர்
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. கடல்நீர் உட்புகுந்தபோதிலும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.
பள்ளிமுனை,பனங்கட்டு கொட்டு, எமில் நகர் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் இவ்வாறு கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் உள்ள கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இன்றைய தினம் சனிக்கிழமை (10) காலை முதல் மறு அறிவித்தல் வரை கடல் தொழிலுக்குச் செல்லவில்லை.
கடல்தொழிலுக்குச் செல்ல அனுமதி மறுப்பு
இதே வேளை இன்றைய தினம் சனிக்கிழமை (10) அசாதாரண வானிலையால் பலத்த காற்று மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக விடத்தல்தீவு துறை ஊடாக கடற்றொழிலுக்கு செல்லும் கடற்றொழிலாளர்கள் கடல் தொழிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் தொழிலுக்குச் செல்லவில்லை.இதனால் தமதுவாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



