கர்ப்பம் தரித்த சிங்கள பெண் : தேசியத் தலைவர் வெளிப்படுத்திய கருணை
போரின் போதும் கூட பாதிக்கப்பட்ட சிங்கள தரப்புக்குமே சிங்கள அரசு சரியான விடங்களை செய்ய தவறியதாக கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் லங்காசிறியின் (LankaSri) ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்த காலத்தில் சிங்கள பெண்ணொருவர் தமிழ் தேசத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தன் கணவனை காண அனுமதி அளிக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தார்.
இதையடுத்து, அவருக்கு குறித்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கணவருடன் ஒரு வாரம் தங்குவதற்கான வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்தநிலையில், அங்கிருந்து திரும்பிய அவர் சில காலத்தில் கர்ப்பமடைந்த நிலையில், அதனை அனைவரும் வசைப்பாடியமயினால் அவர் அது குறித்து சிங்கள அரசுக்கு தெரிவிக்காமல் மீண்டும் தேசிய தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
தான் ஊரில் அவமானப்படுத்தப்படுவதாகவும் எனவே எனக்கு நல்ல ஒரு தீர்வை நீங்கள் பெற்று தருமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, விரைந்து செயற்பட்ட தலைவர், கர்ப்பிணி பெண்ணை அழைத்து அவருடைய கணவரை மீண்டும் அந்த பெண்ணிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தார்.
ஆனால், சிங்கள அரசு இதுக்காகவோ அந்த பெண்ணிற்காவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே தங்கள் மக்களுக்கே ஒன்றும் செய்யாத அரசு தமிழ் மக்களுக்காக எவ்வாறு குரல் கொடுக்கும்” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தமிழ் மக்களின் அரசியல் நிலை, தற்போதைய நடைமுறை அரசியல், எதிர்கால தமிழ் மக்களின் வாழ்வாதாரம், தமிழ் மக்களுக்காக அரசின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றை ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
