மறைக்கப்பட்ட ரணிலின் கோர முகம் : இரகசியமாக நடத்தப்பட்ட பட்டலந்த வதை முகாம் (காணொளி)
Disclaimer : இந்த செய்தியில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளி வயது வரம்புக்குட்பட்டது. மேலும் இது தொடர்பான காணொளி YouTube இல் மட்டுமே பார்வையிட முடியும். |
ஹிட்லர் ஒரு காலத்தில் யூதர்களை அழிப்பதற்காக சித்திரவதை முகாம்கள் அமைத்து அதில் அவர்களை சிறையிட்டு மிகக் கொடூரமாக கொலை செய்தாரோ அதே போன்ற ஒரு சம்பவம் இலங்கையின் தென் பகுதியிலும் சில வருடங்களுக்கு முதல் நடைபெற்றது.
இலங்கையின் தென் பகுதியில் அரசுக்கு எதிராக இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சியை அடக்குவதற்காக இலங்கை அரசாங்கம், 1988 ஆண்டு காலப்பகுதியில் கையாண்ட ஒரு முறை தான் பட்டலந்த சித்திரவதை முகாம் என அறியப்படுகிறது.
இந்தக் கொடூரங்களை மேற்கொள்ள அனுமதித்த பிரமுகர் வேறு யாருமல்ல. சிறிலங்காவின் முன்னாள் பிரதமறும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தான்.
1980களின் பிற்பகுதியிலும் 1990இன் ஆரம்பத்திலும் இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள் சித்திரவதைகள் மற்றும் அவற்றுடன் அரசியல்வாதிகளிற்கு உள்ள தொடர்புகள் குறித்த ஆவணமான பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை குறித்து அந்த அரசாங்கம் ஆராயவுள்ளது.
பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு தொடர்புள்ளதாக குற்றம்சாட்டும் இந்த அறிக்கை குறித்து சமீபத்தைய அல் ஜசீரா பேட்டியின் பின்னர் கவனம் திரும்பியுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்களை தொடர்ந்து இந்த விவகாரத்திற்கு பொறுப்புக்கூறப்படவேண்டும் என்ற வேண்டுகோள்களும் எழுந்துள்ளன.
அதாவது பட்டலந்த என்கின்ற ஒரு பிரதேசத்தில் மட்டும் இடம்பெற்ற கொலைகள் கிடையாது. மாறாக இந்த சித்திரவதை முகாம்கள் இலங்கை எங்கிலும் குறிப்பாக தெற்கு பகுதியில் மட்டும் சுமார் 46 முகாம்கள் காணப்பட்டுள்ளது.
கிரிபத்கொட - பியகம வீதியின் சந்தியில் இருந்து தெற்காக சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இருந்த 'இரசாயன உர ஆலை அதிகாரிகள் விடுதியையே' சிறிலங்கா காவல்துறையின் சி.எஸ்.யூ எனும் சிறப்பு பிரிவு தனது முக்கியமான முகாமாக மாற்றியிருந்தது.
சிறிலங்கா காவல்துறையின் சிரேஷ்ட அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் அந்த சிறப்பு முகாமுக்கு பொறுப்பாக செயற்பட்டிருந்தார்.
அந்த விடுதி வளாகத்தில் இருந்த 64 வீடுகள், சிலவற்றில் சிறிலங்கா காவல்துறையினர் தங்கியிருந்தார்கள். பலவற்றில் காவல்துறையினரால் கடத்திவரப்பட்ட இளைஞர் - யுவதிகள் நிர்வாணமாக கைகள், கால்கள் சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையில், அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.
சித்திரவதை என்கின்ற சொல்லின் உண்மையான அர்த்தத்தை பார்க்க வேண்டும் என்றால் அந்த பட்டலந்த முகாமிற்கு சென்று திரும்ப வேண்டும் என்று சொல்லுவார்கள்.
அந்த அளவிற்கு சித்திரவதை என்கின்ற பெரில் மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் அங்கு அரங்கேறியுள்ளது.
அந்த பட்டலந்த முகாமில் இருந்து தப்பி வந்த ஒருவர் கூறும் விபரங்கள் மனதை உலுக்க வைக்கின்றன.
1994 இல் சந்திரிகா குமாரதுங்க ஏற்படுத்திய பட்டலந்தை விசாரணை ஆணைக்குழு பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சித்திரவதைகள்இசட்டவிரோதமாக தடுத்துவைத்தல்இசட்டவிரோத படுகொலைகள் இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டது ஜேவிபியின் கிளர்ச்சியின் போது ஜேவிபியினருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரசாங்கம் பட்டலந்த வீடமைப்பு திட்டத்தை விசாரணை ஈதடுப்பு முகாமாக பயன்படுத்தியது.
1997 இல் வெளியான ஆணைக்குழுவின் அறிக்கை இ பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிற்கு இ அக்காலப்பகுதியில் சிரேஸ்ட அமைச்சராக பணியாற்றிய ரணில்விக்கிரமசிங்க உட்பட பல அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் தொடர்புள்ளது என தெரிவித்திருந்தது.
பட்டலந்தவில் என்ன நடக்கின்றது என்பது ரணில்விக்கிரமசிங்கவிற்கு தெரிந்திருந்தது அவர் அங்கு சென்று வந்தார் என தெரிவித்திருந்த அறிக்கை ஆனால் அவருக்கு அங்கு இடம்பெற்ற துஸ்பிரயோகங்களுடன் நேரடி தொடர்பிருப்பதை உறுதிப்படுத்தவில்லை.
பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிற்கு காரணமானவர்களிற்கு எதிரான சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும்இசிவில் உரிமைகளை பறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவேண்டும்இஎன விசாரணை குழு பரிந்துரைத்திருந்தது.
ஆனால் இந்த பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை. இந்த அறிக்கை இன்று வரை சர்ச்சைக்குரிய விடயமாக காணப்படுகின்றது.
சித்திரவதை எனும் பெயரில் மனிதத்திற்கு எதிரான கொடூரங்கள் அரங்கேறிய பின்னணி தொடர்பில் ஆராய்கிறது இந்த ஒளியாவணம்,,
காணொளி இணைப்பு : இலங்கைப் பிரதமர் நடாத்திய இரகசிய வதை முகாம்

ஊழியர்களின் அலட்சியம் - அறுவை சிகிச்சையின் பின் பறிபோன 3 வயது சிறுவனின் உயிர்...! நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 3 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்