மதுரோ கைதின் போது அமெரிக்கா பயன்படுத்திய ரகசிய ஆயுதம்! ட்ரம்ப் பகிரங்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனவரி மாதம் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீது நடத்தப்பட்ட தாக்குதலில், Discombobulator என்ற ரகசிய ஆயுதத்தை அமெரிக்க படைகள் பயன்படுத்தியதாக கூறியுள்ளார்.
ட்ரம்பின் விளக்கத்தில், இந்த சாதனம் வெனிசுலாவின் பாதுகாப்பு அமைப்புகளை செயலிழக்கச் செய்ததாகவும் ரஷ்யா மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட ரொக்கெட்டுகள் எதுவும் வேலை செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுரோவின் கைது
இந்த தாக்குதலில் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Image Credit: BBC
இவ்வாறானதொரு பின்னணியில், அமெரிக்க அதிகாரிகள் ட்ரம்ப் கூறிய அந்த Discombobulator ஆயுதத்தின் தொழில்நுட்ப விவரங்களை உறுதிப்படுத்தவில்லை.
சில ஊடகங்கள் இதை Directed-Energy அல்லது Electronic Warfare வகை ஆயுதமாக இருக்கலாம் எனக் கூறினாலும், Pentagon அதிகாரிகள், இந்த பெயரில் எந்த ஆயுதமும் அதிகாரப்பூர்வமாக இல்லை என தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |