உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய கல்வி அமைச்சின் செயலாளர் -நீதிமன்ற படியேறிய ஆசிரிய சங்கம்
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்ட சுற்றறிக்கையை செல்லாததாக்குமாறு உத்தரவு பிறப்பிக்கக் கோரி நேற்று (ஜூலை 26) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கல்வி அமைச்சின் செயலாளர், தேசிய பாடசாலைகளின் பணிப்பாளர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
மே 28 திகதியிட்ட கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், பாடசாலை வகுப்பறையில் இருக்க வேண்டிய அதிகபட்ச மாணவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் அதிகபட்ச மாணவர்களின் எண்ணிக்கை 35 ல் இருந்து அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது ஒரு தன்னிச்சையான மீறல் என மனுவில் கூறப்பட்டுள்ளது.