அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு விசேட அறிவுறுத்தல்

Presidential Secretariat of Sri Lanka
By Vanan Jul 06, 2023 03:46 PM GMT
Report

நாடாளுமன்றத்தின் எந்தவொரு குழுக் கூட்டங்களிலும் பங்குபற்றும் அதிகாரிகள் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பில் உரிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் குழு கோரும் போது தகவல்களை வழங்க தயாராக இருக்க வேண்டும் எனவும் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அறிவித்துள்ளார்.

அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இன்று (06) எழுத்து மூலம் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதோடு அதன் பிரதிகள் சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டங்கள்

அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு விசேட அறிவுறுத்தல் | Secretary To President Instructions Secretaries

நிகழ்ச்சி நிரலில் உள்ள விடயங்கள் தொடர்பாக குழுவின் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க தேவையான தகவல்களை திரட்ட முன்கூட்டி கூட்டங்கள் நடத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாத கேள்விகள் அதிகாரிகளிடம் கேட்கப்படும் சந்தர்ப்பங்களில், பின்னர் பதிலளிக்க நியாயமான கால அவகாசம் கோரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர் அழைக்கப்பட்ட கூட்டத்தில் செயலாளரால் கலந்துகொள்ள முடியாத பட்சத்தில், சம்மந்தப்பட்ட குழுவின் தலைவரின் அனுமதியுடன் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அவர் சார்பாக கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.

மேலும், துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டங்களில் அமைச்சரின் ஒப்புதலுடன் அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும், கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக அமைச்சருக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அமைச்சர் அவற்றை துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவருக்கு அறிவிக்க வேண்டும்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு அரச அதிகாரிகளை அழைக்க எதிர்க்கட்சித் தலைவர் விரும்பினால், சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்த வேண்டும், அதற்கேற்ப அதிகாரிகள் அந்தக் கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

நிதி தொடர்பான மேற்பார்வைக் குழுக்களுக்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் அழைக்கப்பட்டால், அவர்கள் நிதி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025