துப்பாக்கிச் சூடு, கொலைகளுக்குப் பின்னால் படையினர் : வெளிவரும் அதிர்ச்சி தகவல்
நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு, கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளில் சிறிலங்காபாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த பலர் நேரடியாக ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, காவல்துறை, புலனாய்வு அமைப்புகள் மற்றும் முப்படைகள் தனித்தனியான உள்ளக விசாரணைகளைத் தொடங்கியுள்ளன, மேலும் குற்றங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமை
இந்த பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் துப்பாக்கிச் சூடுகளில் பங்கேற்றது, குற்றவியல் குழுக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கியது போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளை கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
விசாரணை முடிந்ததும் சந்தேக நபர்கள் உடனடியாக கைது செய்யப்பட உள்ளனர்.
பல குற்றங்களுக்குத் தகவல்களை வழங்கியவர்கள்
மேலும், காவல்துறை மற்றும் இராணுவத்திடமிருந்து ஆயுதங்களைக் கடத்தியதில் ஈடுபட்டவர்கள் மற்றும் விடுதலைப் புலிகளால் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கிகளை முகாம்களில் இருந்து கடத்தல்களைச் செய்தவர்கள் பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் நடந்த பல குற்றங்களுக்குத் தகவல்களை வழங்குவதில் ஈடுபட்ட பல பாதுகாப்புப் படையினர் பற்றிய தகவல்களும் கிடைத்துள்ளன என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

