வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் பாதுகாப்புத் தரப்பு - கஜேந்திரகுமாரை எச்சரிக்கும் அநுர அரசு

Sri Lanka Army Sri Lanka Police Jaffna Northern Province of Sri Lanka NPP Government
By Thulsi Nov 13, 2025 02:22 AM GMT
Report

வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் ஈடுபடவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரால் (ஓய்வு நிலை) அருணஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், காவல்துறையினரும் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிடுகிறார்.

வடக்கில் போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் இராணுவத்தினர்! ஒப்புக்கொண்ட அரசாங்கம்

வடக்கில் போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் இராணுவத்தினர்! ஒப்புக்கொண்ட அரசாங்கம்

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி

அவ்வாறு முறையற்ற வகையில் செயற்படும் இராணுவத்தினர், காவல்துறையினர் யார், அவர்களின் சேவை பிரதேசம் தொடர்பான விபரங்களை அவர் வெளிப்படுத்த வேண்டும்.

வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் பாதுகாப்புத் தரப்பு - கஜேந்திரகுமாரை எச்சரிக்கும் அநுர அரசு | Security Forces Not Involved Illegal Activity

அவ்வாறு குறிப்பிட்டால் ஆராய்ந்து பார்ப்போம். இவர் குறிப்பிடுவதை போன்று பாதுகாப்பு தரப்பினர் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பு படவில்லை. 

கடந்த காலங்களில் அரசாங்கங்கள் எடுத்த தவறான தீர்மானங்களினால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள். அரச நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதால் நாடும் வங்குரோத்து நிலையடைந்தது. 

தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறந்த முறையில் செயற்படுத்தி வருகிறது. 

வடக்கில் நுண்கடன் நிதி நிறுவனங்களால் உயிர்மாய்ப்புகள்...! குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்

வடக்கில் நுண்கடன் நிதி நிறுவனங்களால் உயிர்மாய்ப்புகள்...! குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்

போலியான குற்றச்சாட்டு

எதிர்க்கட்சியினர் தான் கலக்கமடைந்து போலியான குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

கடந்த கால அரசாங்கங்கள் பிணைமுறி மோசடி, தேங்காய் எண்ணெய் மோசடி, சீனி மோசடி, வெள்ளைப் பூண்டு உட்பட பாரதூரமான மோசடிகளால் தான் பிரபல்யமடைந்தன. 

வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் பாதுகாப்புத் தரப்பு - கஜேந்திரகுமாரை எச்சரிக்கும் அநுர அரசு | Security Forces Not Involved Illegal Activity

பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தை தயாரித்துள்ளோம்.

நிதி ஒழுக்கம் தற்போது கடுமையான முறையில் பேணப்படுகிறது. கடந்த காலங்களை போன்று முறையற்ற வகையில் வரவு - செலவுத் திட்டத்தை தயாரிக்கவில்லை. 

மக்களுக்கு போலியான நிவாரணங்களை வழங்கும் வாக்குறுதிகளை வழங்கவில்லை. மக்களுக்கு சாதகமான முறையில் தான்இந்த வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

குரல் பதிவு சர்ச்சையால் தடுமாறும் செல்வம் எம்பி: உண்மைகளை வெளிப்படுத்த முன்வருவாரா..!

குரல் பதிவு சர்ச்சையால் தடுமாறும் செல்வம் எம்பி: உண்மைகளை வெளிப்படுத்த முன்வருவாரா..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
நன்றி நவிலல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி