துப்பாக்கிச்சூட்டின் எதிரொலி - பலப்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பு
புதிய இணைப்பு
மேல்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட அனைத்து தனிநபர்களையும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதியரசரின் தலைமையில் இன்று (20) இடம்பெற்ற விசேட கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவு அமைய மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதி அண்டிய வளாகத்தில் இன்று வியாழக்கிழமை (20.02.2025) பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
நீதிமன்ற கட்டிடத்தொகுதியின் சகல வாசல்களிலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர்
நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குள் பிரவேசிக்கும் சகல வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டதன் பின்பு நீதிமன்ற வளாகம் செல்ல அனுமதிக்கப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.
மேலும், நீதிமன்ற பிரதான வீதிகளில் போக்குவரத்து காவல்துறையினரும் கடமைகளில் ஈடுபட்டுள்ளமையும் அவதானிக்க முடிவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
நாட்டை உலுக்கிய துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக இன்று நாடாளுமன்ற பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருகைதரும் வாகனங்கள், நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதாள உலக கும்பலின் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ நேற்று (19) கொழும்பு (Colombo) - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
கணேமுல்ல சஞ்சீவ பூசா சிறைச்சாலையிலிருந்து நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக அழைத்துவரப்பட்ட நிலையில் புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டின் பாதுகாப்பு குறித்து பாரிய கேள்வியை எழுப்பி உள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றம் கூடும் தினங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று (20) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) நாடாளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 14 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்