இனி குழுக்கூட்டங்களில் வெளியாட்கள் பங்குபற்றுவது கடினம் : சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு!
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
By Kathirpriya
குழுக்கூட்டங்களில் வெளியாட்கள் பங்கேற்கவேண்டுமானால் சபாநாயகரின் அனுமதியினைப் பெற்றிருக்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
சகல குழுக்களின் தலைவர்களும் இதனைக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என அவர் இன்று (20) தெரிவித்தார்.
அதிகரித்து வரும் புகார்கள்
குழுக் கூட்டங்களில் வெளியாட்கள் பங்கேற்பது குறித்து அதிகரித்து வரும் புகார்களினைத் தொடர்ந்தே அவர் இந்த முடிவினை எடுத்திருப்பதாக கூறினார்.

மேலும், உத்தியோகபூர்வ தலைப்பிடப்பட்ட கடிதத்தாள்களை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுமாறும் இதன் போது குழுத் தலைவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் மகன் பிரசன்னமானது நாடாளுமன்றத்தில் பேசுபொருளாகியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி