விடுதலைப்புலிகளின் தலைவரை சந்தித்தாரா சீமான்..? அம்பலமாகும் தகவல்
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்தது உண்மை தான் என பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கார்த்திக் மனோகரன் குறித்த ஊடகத்திற்கு தெரிவித்துள்ளதாவது, “நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்தது உண்மை தான்.
ஆனால் அவர் சொல்வதுபோல் மணிக்கணக்கில் எல்லாம் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை. குறைந்தது 8ல் இருந்து 10 நிமிடம் வரை அந்தச் சந்திப்பு நடந்திருக்கலாம்.
சீமானின் புகைப்படம்
அவர் புகைப்படம் எடுப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். சீமான் விருப்பம் தெரிவித்து அங்கு வருகிறார். சித்தப்பாவும் யார் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டாலும் புகைப்படம் எடுத்துக்கொள்வார்.
ஆனால் அதனை வருபவர்களின் கேமராக்களில் எடுக்க அனுமதி கிடையாது. குடும்ப உறவினர்களே ஆனாலும் பாதுகாப்பு காரணமாக இயக்கத்தின் கேமராவில் தான் புகைப்படம் எடுக்கப்படும்.
அதன் பிறகு அந்தப் புகைப்படத்தை அவர்களிடம் கொடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஒருவேளை அப்படியான கட்டுப்பாட்டில் சீமானின் புகைப்படம் கொடுக்கப்படாமலும் இருந்திருக்கலாம்.
அதனால் அவர் தனது அரசியல் தேவைக்காக இப்படியான ஒரு எடிட் செய்த புகைப்படத்தை உபயோகித்துவருகிறார் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.” என பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் தெரிவித்தாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |