சீமானின் பேச்சால் வெடித்தது சர்ச்சை

Indian National Congress Tamil nadu Seeman
By Jaso Aug 02, 2023 12:44 AM GMT
Report

முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கடுமையாக சீமானை சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள்

சீமானின் பேச்சால் வெடித்தது சர்ச்சை | Seemans Speech Sparked Controversy

மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று முன்தினம் (31.07.2023) போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் எனப் பேசி இருக்கிறார். மேலும், நாட்டில் நிலவும் அநீதிக்கும், அக்கிரமத்திற்கும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.

சீமானின் இந்தப் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தது. அவரது பேச்சு மிகவும் அருவருப்பானது; அதை விட ஆபத்தானது.

மணிப்பூரில் ஒடுக்குமுறைக்கும், வன்முறைக்கும் ஆளான பழங்குடியின மக்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது. எப்போதெல்லாம் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான அலை வீசுகிறதோ, அப்போதெல்லாம் அதை மடைமாற்றம் செய்வது போலவே சீமானின் பேச்சுகள் உள்ளன.

புத்தரின் போதனை

சீமானின் பேச்சால் வெடித்தது சர்ச்சை | Seemans Speech Sparked Controversy

இதே சீமான் தான், தேர்தல் சமயத்தில் 'வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்கள் மீது அமிலம் வீசுங்கள்' என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருந்தார். இதையும் தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

"வெறுப்பு முடிவுக்கு வருவது வெறுப்பால் இல்லை; அன்பால் மட்டுமே. இதுவே நிலையான விதி" என 2500 ஆண்டுகளுக்கு முன்பே புத்தர் சொல்லி சென்றுவிட்டார்.

மதவெறி சக்திகளும், வெறுப்பு அரசியல் கும்பலும் இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க சதி செய்கிறார்கள். அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு பயணிக்கும் வலிமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. வெறுப்பு அரசியல் பேசியதால் யாருமே வெற்றியடைந்ததில்லை. அதற்கு சிறந்த உதாரணமாக தற்போது கர்நாடகா மாநிலம் உள்ளது.

தமிழ்நாட்டில் பாஜக மட்டுமல்ல; யார் வெறுப்பு அரசியல் செய்தாலும் இந்த மண்ணில் எடுபடாது. இனி வரும் காலங்களில் அரசியல் தலைவர்கள் தங்கள் பேச்சில் கண்ணியம் காக்க வேண்டும். யார் மனதையும் புண்படும்படி பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025