சீனக்குடாவில் படகொன்று விசமிகளால் தீக்கிரை
accident
fire
seenakkuda
By Vanan
சீனக்குடா , சின்னம் பிள்ளைச் சேனை கடற்கரைப் பகுதியில் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் தனியாருக்கு சொந்தமான படகு ஒன்று இனந்தெரியாத நபர்களினால் நேற்று (22) தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து சீனக்குடா பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் பாதுகாப்பு , மற்றும் திருகோணமலை பட்டனமும் சூழலும் ஆகியோரின் அனுமதியினைப் பெற்று மேற்கூரை மற்றும் சொகுசு இருக்கைகளை அமைத்து இப் பயணச் சேவைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
இவரோடு தனிப்பட்ட விரோதம் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி