திருகோணமலையில் விழுந்து நொறுங்கிய விமானம் - இருவர் உயிரிழப்பு
Trincomalee
Sri Lanka Air Force
By Pradheepan
சிறிலங்கா விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.
இன்று(07) முற்பகல் 11.30 அளவில் திருகோணமலை - சீனக்குடா விமானப்படை தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக விமானப்படை பேச்சாளர் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணை

இந்த விபத்தில் விமான பயிற்சியாளர் மற்றும் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதானி ராஜபக்ஷ விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
