தமிழ் மக்கள் தொடர்பில் சம்பந்தனிடம் சிவாஜிலிங்கம் எழுப்பிய கேள்வி..!

R. Sampanthan Sri Lanka Politician ITAK
By Raghav May 25, 2024 01:24 PM GMT
Report

ஈழத் தமிழினம் அழிந்ததன் பின்னர் தான் சம்பந்தன் வெளியக சுய நிர்ணய உரிமையைக் கோரப் போகின்றாரா என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் ,நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம்(M. K.SHIVAJILINGAM) கேள்வி எழுப்பியுள்ளார்.

 அதிபர் தேர்தலில் தமிழ் வேட்பாளர் தொடர்பில் இரா.சம்பந்தன் (R. Sampanthan) தெரிவித்த கருத்து தொடர்பில் எம்.கே.சிவாஜிலிங்கம்  ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில், “உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், இணைந்த வடக்கு கிழக்குக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு என்பதுதான், சர்வதேச மட்டத்தில் விடுதலை புலிகள் இயக்கமும் இலங்கை அரசும் சேர்ந்து இணங்கிக் கொண்ட விடயம்.

வெளியானது மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி

வெளியானது மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி


தமிழ் அரசுக் கட்சி

அதற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் முடிவு எதையும் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் எடுக்கக் கூடாது என்று தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் சம்பந்தன் ஐயா கூறியிருக்கின்றார்.

தமிழ் மக்கள் தொடர்பில் சம்பந்தனிடம் சிவாஜிலிங்கம் எழுப்பிய கேள்வி..! | Self Determination After Destruction Tamil Eelam

ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஐதராபாத் அணி

ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஐதராபாத் அணி


சிறிலங்கா அரசு இன்னமும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்வாகக் கொண்டுள்ளது என்பது அடி முட்டாள் தனமான நம்பிக்கை.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பிற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு கிழக்கு மாகாணத்தில் நடைபெறாமலேயே உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி (Supreme Court) தற்காலிக இணைப்பு பிரிக்கப்பட்டு, 18 ஆண்டுகள் நடந்து விட்டது.

ஈழத் தமிழர்கள்

உள்ளக சுயநிர்ணய உரிமை என ஐக்கிய நாடுகள் சபையின் நியமங்களின் அடிப்படையிலோ அல்லது சர்வதேச சட்டங்களிலோ கிடையாது.சுயநிர்ணய உரிமை என மாத்திரமே (RIGHT TO SELF - DETERMINATION) குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் தொடர்பில் சம்பந்தனிடம் சிவாஜிலிங்கம் எழுப்பிய கேள்வி..! | Self Determination After Destruction Tamil Eelam

இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள். எனவே பொதுமக்கள் வாக்கெடுப்பை வடக்கு-கிழக்கு மாகாணங்களில் நடத்த முடியாது என சம்பந்தன் ஐயா கூறுவது தவறானது.

ஐக்கிய நாடுகள் சபையினால் அல்லது சர்வதேச சமூகத்தினரால் நடத்தப்படும் சுதந்திரத்திற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு (INDEPENDENCE REFERNDUM) புலம்பெயர் மக்கள் தாங்கள் வாழும் நாடுகளிலேயே வாக்களிக்க முடியும் இதற்கு பல நாடுகளில் நடைபெற்ற வாக்களிப்புக்களை உதாரணமாகக் கூற முடியும்.

நிர்ணய உரிமை

அடிக்கடி சம்பந்தன் ஐயா ஈழ தமிழ் மக்களுக்கு உள்ளக சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட்டால் எமக்கு வெளியக சுய நிர்ணய உரிமையை கோரும் உரித்து உண்டு எனவும் கூறுவார். ஈழத் தமிழ் இனம் அழிந்ததன் பின்னர் தான் சம்பந்தன் ஐயா வெளியக சுய நிர்ணய உரிமையைக் கோரப் போகின்றாரா  சுய நிர்ணய உரிமை என்பது தமக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை அந்த மக்களே தீர்மானிக்க வேண்டும்.

தமிழ் மக்கள் தொடர்பில் சம்பந்தனிடம் சிவாஜிலிங்கம் எழுப்பிய கேள்வி..! | Self Determination After Destruction Tamil Eelam

சமஷ்டி தீர்வுக்காகவோ அல்லது கூட்டு சமஷ்டித் தீர்வுக்காகவோ சர்வதேச மத்தியஸ்தம் சாத்தியமில்லை. உள்நாட்டிலேயே உள்ள தீர்வை உள்நாட்டிலேயே பெற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச சமூகமும் கூறும்.

எனவே, ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் அல்லது சர்வதேச சமூகத்தினரால் நடத்தப்படும் பொதுமக்கள் வாக்கெடுப்பை நாங்கள் கோருகின்றோம். இந்த விடயங்களை தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் சம்பந்தன் ஐயா உட்பட ஈழத் தமிழினத்தின் கவனத்திற்கு சமர்ப்பிக்க விரும்புகின்றேன் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தள்ளார்.

தோனியின் ஓய்வு: சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி வெளியிட்ட தகவல்

தோனியின் ஓய்வு: சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி வெளியிட்ட தகவல்

சிறிலங்காவில் நடைபெற உள்ள 9வது அதிபர் தேர்தல் ஈழத் தமிழ் இனத்தின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைய வேண்டும் என சிவாஜிலிங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021