டொலரின் விற்பனை விலை 336-ஐ தாண்டியது
இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்ட சமீபத்திய தினசரி நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் ரூ. 336 என்ற பெறுமதியை தாண்டியுள்ளது.
மத்திய வங்கி இன்று (02) வெளியிட்ட தினசரி நாணய மாற்று விகிதக் குறியீட்டின்படி, அமெரிக்க டொலரின் கொள்விலை ரூ. 326.75 ஆகவும், விற்பனை விலை ரூ. 336.60 ஆகவும் பதிவாகியுள்ளது.
எனினும் நேற்றை (01) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்விலை ரூ. 325.97 ஆகவும், விற்பனை விலை ரூ. 335.70 ஆகவும் பதிவாகியுள்ளது.
விலை விபரம்
செலான் வங்கியின் தகவல்படி, அமெரிக்க டொலரின் கொள்விலை ரூ. 323.25 ஆகவும், விற்பனை விலை ரூ. 337 ஆகவும் மாற்றமின்றி உள்ளது.

NDB வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்விலை ரூ. 326-லிருந்து ரூ. 327.50 ஆகவும், விற்பனை விலை ரூ. 335-லிருந்து ரூ. 336.50 ஆகவும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்விலை ரூ. 326.50-லிருந்து ரூ. 327 ஆகவும், விற்பனை விலை ரூ. 335.74-லிருந்து ரூ. 336.25 ஆகவும் அதிகரித்துள்ளதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கொமர்ஷியல் வங்கியில், கொள்விலை மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ. 322.98-லிருந்து ரூ. 324.47 ஆகவும், ரூ. 335-லிருந்து ரூ. 335.50 ஆகவும் அதிகரித்துள்ளன.
சம்பத் வங்கியில், கொள்விலை மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ. 326.50 மற்றும் ரூ. 335.50 என மாற்றமின்றி உள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |