ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன்!
Vavuniya
Selvam Adaikalanathan
By Independent Writer
Courtesy: kapil

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
ரெலோவின் 12வது தேசியமாநாடு வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று(14) மாலை இடம்பெற்றது.
புதிய நிர்வாகத் தெரிவு
இதன்போது இயக்கத்தின் புதியநிர்வாகத்தெரிவு இடம்பெற்றது. கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

செயலாளராக கோவிந்தம் கருணாகரன்(ஜனா) உபதலைவராக சுரேன்குருசாமி,நிதிச்செயலாளராக க.விஜிந்தன்,நிர்வாகசெயலாளராக நித்தியானந்தன்,இளைஞரணி செயலாளராக பிரபாகரன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து தலைமைக்குழு,மற்றும் மத்தியகுழு உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்