செல்வம் அடைக்கலநாதன் - கஜேந்திரகுமார் விசேட சந்திப்பு

Kilinochchi Gajendrakumar Ponnambalam S. Sritharan Selvam Adaikalanathan
By Jaso Dec 10, 2024 08:09 PM GMT
Report

 ரெலோ (telo)கட்சியின் தலைவரும்,வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கல நாதனுக்கும்(selvam adaikalanathan) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் (gajenrakumar)இடையில் இன்று (10) செவ்வாய்க்கிழமை இரவு கிளிநொச்சியில் அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,,,

புதிய அரசியலமைப்பை எவ்வாறு எதிர்கொள்வது

விசேடமாக அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை கொண்டு வர உத்தேசித்துள்ள இச் சூழ் நிலையில் குறித்த அரசியல் அமைப்பை உறுதியாக அறிவித்துள்ள நிலையில்,அதனை நாடாளுமன்றத்தில் எவ்வாறு எதிர் நோக்கப்போகின்றோம் என்ற விடையம் குறித்தும்,குறிப்பாக தமிழ் தேசிய மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும்,புதிய அரசியல் அமைப்புகொண்டு வரப்படுகின்ற சந்தர்ப்பத்திலே எங்களுடைய நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாடு,தொடர்பாகவும் கலந்துரையாட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உள்ளோம்.

செல்வம் அடைக்கலநாதன் - கஜேந்திரகுமார் விசேட சந்திப்பு | Selvam Aadikalanathan Gajendrakumar Meeting

புது வருடத்தின் பிற்பாடு ஆழமான கலந்துரையாடல்

நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போன்று நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் அவர்களுக்கு தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தை மையப்படுத்தி நாங்கள் இக் கலந்துரையாடலை நடத்த வேண்டும் என்பதை கேட்டு இருந்தோம். அந்த வகையில் எமது தீர்வு திட்டத்தில் ஒரு பிரதியையும் வழங்கி மேலதிகமாக புது வருடத்தின் பிற்பாடு,நாங்கள் மீண்டும் கூடி தமிழ் மக்கள் பேரவையின் யோசனைகளை ஆழமாக ஆராய்வதற்கு இனங்கியுள்ளோம்.

செல்வம் அடைக்கலநாதன் - கஜேந்திரகுமார் விசேட சந்திப்பு | Selvam Aadikalanathan Gajendrakumar Meeting

சிறிதரன் எம்.பியுடனும் பேச்சு

அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனோடும் இவ் விடயம் தொடர்பாக பேசி புதிய வருடத்தோடு மேலதிக நடவடிக்கைகளையும் முன்னெடுக்க நாங்கள் யோசித்து இருக்கின்றோம்.

செல்வம் அடைக்கலநாதன் - கஜேந்திரகுமார் விசேட சந்திப்பு | Selvam Aadikalanathan Gajendrakumar Meeting

அந்த சந்திப்பு பேரவையினுடைய தீர்வு திட்டத்தை ஆழமாக ஆராய்வதற்கான சந்தர்ப்பத்தை தமிழரசுக் கட்சி,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,சிவில் சமூக தலைவர்களையும் உள் வாங்கி மேலதிகமாக இவ்விடயத்தில் உள்வாங்கப்பட வேண்டிய விடையங்களை நாங்கள் வருகின்ற ஒரு சில நாட்களில் சிறிதரன் எம்.பி யோடும் பேசி முடிவு எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.  

சபாநாயகரின் பட்ட சர்ச்சை : கிளம்பும் எதிர்ப்பு

சபாநாயகரின் பட்ட சர்ச்சை : கிளம்பும் எதிர்ப்பு

கனடாவில் பயங்கர ஆயுதங்களுடன் தமிழ் தம்பதி கைது

கனடாவில் பயங்கர ஆயுதங்களுடன் தமிழ் தம்பதி கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016